வெற்றிநடை போடும் திமுக!: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!!

சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகம் கண்டுள்ளார். எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி முன்னிலை பெற்றார். திருவல்லிக்கேணி தொகுதி நட்சத்திர வேட்பாளர் தொகுதியாக மாறி இருந்தது. இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் அங்கு போட்டியிட்டதே. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 

பல தொகுதிகளில் திமுக-வினரே வெற்றி முகம் கண்டு வருகின்றனர். இதனை கழக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி முகம் கண்டுள்ளார். 

இதுவரை உதயநிதி பெற்ற வாக்குகள் 65,595 ஆகும். இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகள் 39,223 ஆகும். 48,384 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி முன்னிலை பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகள் பெற்றிருக்கிறார். இதேபோல் எக்மோர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். எக்மோரை பொறுத்தமட்டில் 25,124 வாக்குகள் வித்யாசம் உள்ளது.

Related Stories: