வேலூர் மண்டி தெருவில் வாகன ஓட்டிகள் அவதி கடந்த ஓராண்டாக மூடப்படாத பள்ளம்-மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்

வேலூர் : வேலூர் மண்டி தெருவில் கடந்த ஓராண்டாக மூடப்படாத பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

வேலூர் மண்டி தெருவில் பல்வேறு கடைகள் உள்ளது. இந்த கடைகளில் பொருட்கள் வாங்க பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மண்டி வீதி இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் மண்டி வீதியில் சாலையின் நடுவே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. அடைப்பு சரி செய்யப்பட்டது. இருப்பினும் தோண்டிய பள்ளத்தை மூடாமல் கடந்த ஓராண்டாக அப்படியே உள்ளது. குப்பைகள் அதில் தேங்கி உள்ளது.

இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டும் நிலை உருவாகி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பள்ளம் இருக்கும் இடம் கூட தெரியாமல் இருப்பதால் கடும் அவதிக்கு அளாகி வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: