நெல்லையில் புதிய எஸ்ஐக்களுக்கு கலந்துரையாடல் கூட்டம் பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்: எஸ்பி சரவணன் அறிவுரை

நெல்லை: போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டுமென நேரடியாக எஸ்ஐ தேர்வு பெற்ற எஸ்ஐக்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட எஸ்பி சரவணன் அறிவுறுத்தினார்.நெல்லை மாவட்டத்தில் நேரடி எஸ்ஐக்களாக தேர்வு பெற்று பயிற்சி முடித்த 23 புதிய நேரடி எஸ்ஐக்களுக்கு கலந்துரையாடல் கூட்டம், எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. எஸ்பி சரவணன் தலைமை வகித்து பேசுகையில், தகுதிக்காண் பருவத்தில் இருக்கும் எஸ்ஐக்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கினார். அப்போது, அனைத்து சட்டம் சம்பந்தமான நுணுக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க வரும் மனுதாரர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய சட்டவிதிமுறைகள் குறித்தும், காவல்நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலைய பணிகளை சட்டப்படி எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கினார். மேலும் குற்ற சம்பவங்கள் மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட எதிரிகளை எஸ்ஐயாக பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே விரைவாக கைது செய்ததற்காகவும், சொத்துகளை விரைந்து மீட்டதற்காகவும் எஸ்ஐக்களை பாராட்டினார். எஸ்ஐ மார்க்கரெட் தெரசா, புதிதாக பொறுப்பேற்று உள்ள எஸ்ஐக்களுக்கு ஸ்மார்ட் காவலர் செயலி குறித்து பயிற்சி அளித்தார். மானூர் எஸ்ஐக்கள் விஜயகுமார், நஸ்ரின், சிவந்திப்பட்டி எஸ்ஐ மேகலா, முக்கூடல் எஸ்ஐ ஆக்னல் விஜய் உள்பட 23 பேரை எஸ்பி சரவணன் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

The post நெல்லையில் புதிய எஸ்ஐக்களுக்கு கலந்துரையாடல் கூட்டம் பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்: எஸ்பி சரவணன் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: