தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் நாளை வெளியீடு: 5 மாநிலங்களில் யார் யார் ஆட்சி அமைப்பர்?

சென்னை: தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன. கொரோனா 2 வது அலைக்கு மத்தியில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  கடந்த மாதம் 6 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தப்படி 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும்

தமிழகத்தை பொறுத்தவரை வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் உள்ளன. நாளை தினம் ஞாயிறு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுப்படுபவர்கள் மட்டும் முகவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முகவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்றுதழ் அல்லது தடுப்பூசி போட்டதற்கான சான்றுதழ் அவசியமாகும். வாக்கு எண்ணும் மையங்களில்  முழு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். 98.6 டிகிரிக்கு மேல் உள்ளவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தமிழகம் முழுவதும் 16,387 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இன்று இரவு முதல் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர். வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அனை்தது மையங்களிலும் சிசிடிவி கேமரா மூலம் வாக்கு எண்ணும் பணிகள் கண்காணிக்கப்படும். காலை 8 மணி முதல் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் 8.30 மணி முதல் மின்னணு வாக்கு இயந்திரங்களில்  பதிவான வாக்குகள் எண்ணப்படும். நண்பகல்லுக்கு முன்னறே பெரும்பான்மை முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: