கோவாக்சின் தடுப்பூசி விலையில் ரூ.200 குறைக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு..! இனி ரூ.400 க்கு விற்பனை

சென்னை: கோவாக்சின் தடுப்பூசி விலையில் ரூ.200 குறைக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி ரூ.400க்கு வழங்கப்படும். கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.100 குறைக்கப்பட்ட கோவாக்சின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்குவழங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தனியாருக்கு விற்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.1200ஆக தொடரும். மாநில அரசுகள் மற்றும் தனியார் அமைப்புகள் தொடர்ந்து அதிக விலையில் தடுப்பூசி விற்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தடுப்பூசி தொடர்ந்து அதிக விலையிலேயே நீடித்தால் அது பொதுமக்களுக்கு சிரமமாக இருக்கும். பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக அளிக்க வேண்டும் என்றால் மாநில அரசுகள் பெரிய நிதிச்சுமையை சுமக்க வேண்டி இருக்கும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கனவே தலையிட்டு பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து ஏற்கனவே கோவிஷீல்டு விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது கோவாக்சின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: