கொரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைவு!: 12 ரயில் சேவைகளை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை: கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில்கள் ரத்தாகி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை உயர்த்து வருவதால்  போக்குவரத்து சேவைகளும் குறைக்கப்பட்டு வருகிறது. மக்களை நடமாட்டத்தை கட்டுப்படுத்த இவ்வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பயணிகள் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில்கள் ரத்தாகி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதன்படி ராமேஸ்வரம், குமரி வாராந்திர சிறப்பு ரயில்கள் சனி, திங்கள், புதன் நாட்களில் மே 1 முதல் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. குமரி - ராமேஸ்வரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: