மெட்ரோ ரயில்களில் 50 சதவீத கட்டண சலுகை ரத்து

சென்னை: மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து ஊழியர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை தினங்களில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகை இன்று (25.4.2021) முதல் ரத்து செய்யப்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில்வே மொபைல் செயலி, இணையதளம், நிலைய அறிவிப்பு பலகைகள் ஆகியவற்றில் கட்டண சலுகை குறித்து வைக்கப்பட்ட அறிவிப்புகளை நீக்க வேண்டும். அனைத்து நிலைய கட்டுப்பாட்டாளர்களும் இதை பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: