சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட விவகாரம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: தேவேந்திர குல நலச்சங்கம் சார்பில் டிஜிபியிடம் புகார்

சென்னை: தேவேந்திர குல வேளாளர் சங்கங்களைச் சேர்ந்த 16 அமைப்பினர் சார்பில், டிஜிபி திரிபாதியை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், கடந்த 22ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதியான முத்து மனோ(27) சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சிறையிலேயே கைதி கொலை செய்யப்படும் அளவிற்கு சிறையில் கைதிகளுக்கு பாதுகாப்பின்மையும் ஒரு சிலருக்கு மற்றவர்களை தாக்கி கொலை செய்கிற அளவிற்கு சிறையில் செல்வாக்கும் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

மேலும் சிறைக் கைதியை கொலை செய்யவேண்டும் என்றநோக்கத்தில் தான் வைகுண்டம் கிளைச் சிறையில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.  எனவே இந்த சிறையில் நடந்த மர்மக் கொலை சம்பந்தமாக பாளையங் கோட்டை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் பணியில் இருந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

மேலும் முதற்கட்ட விசாரணை நடத்தி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் தென்மாவட்ட காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் சாதியமாகி குற்றவாளிகளுடன் சேர்ந்து சட்டவிரோதமாக நடவடிக்கைகளுக்கு  துணைபோவதால் அனைவரையும் மாற்ற வேண்டும். இறந்த குடும்பத்திற்கு ₹50 லட்சம் நஷ்ட ஈடும், குடும்ப வாரிசு ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும், என கூறியுள்ளனர்.

Related Stories: