ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்: ஆடியோ வெளியிட்ட சித்தியிடமும் விசாரணை

சேலம்: சேலத்தில் ரூ.10 லட்சத்திற்கு விற்கப்பட்ட வழக்கில், மீட்கப்பட்ட சிறுமியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். மேலும் ஆடியோ வெளியிட்ட சித்தியிடமும் விசாரணை நடந்தது. சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை ரூ.10 லட்சத்திற்கு தொழிலதிபர் கிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்தது தொடர்பாக சிறுமியின் தாய் சுமதி, தந்தை சதீஷ்குமார், தொழிலதிபர் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமி விற்பனை தொடர்பாக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து சேலத்தில் நாளை விசாரணை நடத்துகிறது.

இதனால் பதறிப்போன டவுன் மகளிர் போலீசார் அவசர அவசரமாக நேற்றுமுன்தினம்  கைதான சுமதி உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் காப்பகத்தில் உள்ள சிறுமியை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் பெற்றனர். மேலும் ரூ.10 லட்சத்திற்கு சிறுமியை விற்பனை செய்த விவகாரத்தை ஆடியோவாக வெளிளிட்ட சுமதியின் சகோதரி லதா, சிறுமியின் பாட்டி சின்னப்பெண்ணு ஆகியோரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. தொழிலதிபரின் லேப்டாப், செல்போன், லதாவின் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கூடுதல் துணை கமிஷனர் கும்மராஜா மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: