ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கழகம்

ராமநாதபுரம்: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியும் அரிச்சல்முனை தனுஷ்கோடி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.  கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் புதுரோடு சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து சுற்றுலா வாகனங்கள் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் அரசு நகரப் பேருந்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலா பயணிகள் கூட்டமாக வந்து இறங்கினர். இவர்கள் அரிச்சல்முனையில் குளியல் செய்து கடல் அழகை கண்டு ரசித்து சென்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் உத்தரவை பின்பற்றாமல் ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கழகம் சுற்றுலாப் பயணிகளை கூட்டமாக ஏற்றி சென்றது அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட கதையாக ஆனது.

Related Stories: