12 நாளில் அதிதீவிர கொரோனா பரவல் இரண்டு மடங்கானது: 37 சதவீதம் பேர் மட்டுமே 2வது டோஸ் எடுத்துள்ளனர்: போதிய விழிப்புணர்வு இல்லை என மருத்துவர்கள் கவலை

சென்னை: நாடு முழுவதும் கடந்த 12 நாட்களில் கொரோனா பரவல் இரு மடங்காக அதிதீவிரமாக அதிகரித்துள்ளது. இதில், முன்களப் பணியாளர்களில்  37% பேர் மட்டும் 2வது டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா 2வது அலை நாடு முழுவதும்  அதி தீவிர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதும் கடைபிடிக்காததால் இதுபோன்ற 2வது அலையை எதிர்கொள்ள  வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.நாடுமுழுவதும் கடந்த 6 நாட்களில் கொரோனாவுக்கு 1000 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. கடந்த 12 நாட்களுக்கு முன்பு 8 சதவீதமாக இருந்த தின பாதிப்பு தற்போது 16.7 சதவீதமாக  அதிகரித்துள்ளது. அதாவது இரு மடங்காகியுள்ளது. சத்தீஸ்கர், கோவா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த கடந்த மாதம் 3  சதவீதமாக இருந்த கொரோனா பரவல் தற்போது 13.5 சதவீதமாக அதாவது 4 மடங்கு அதிகரித்துள்ளது.கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முன்களப்  பணியாளர்களான மருத்துவர்கள், சுகாராத பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் போன்றவர்களுக்கு போடப்பட்டது.

அதன்படி இதுவரை 2.36 கோடி முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்தனர். இவர்களில் 37 சதவீத முன்களப் பணியாளர்கள்  மட்டுமே போட்டுக்கொண்டுள்ளனர். 91 லட்சம் பேர் முதல் தடுப்பூசியை போட்டுள்ளனர். முன்களப் பணியாளர்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி  குறித்து முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தாததே இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மருத்துவர்களும், பிரபலங்களும்  கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ள நிலையில் முன்களப் பணியாளர்கள் மத்தியில் இன்னும் பக்க விளைவு ஏற்படுமோ என்ற பயம் நிலவி  வருகிறது. சுகாதார பணியாளர்களே கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்வரவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி தடுப்பூசி போடுவார்கள் என்று  மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: