தமிழகம் முழுவதும் 51 கூடுதல் மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்: உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 51 கூடுதல் மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.காந்தகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். மதுரை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி நஷீமா பானு கரூர் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், கோவை 1வது கூடுதல் மாவட்ட நீதிபதி குணசேகரன் தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதியாகவும், செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தலீலா வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை 2வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி சமீனா திருநெல்வேலி நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், சென்னை பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்ற கூடுதல் நீதிபதி வேங்கடவரதன் சிபிஐ வழக்குகளுக்கான 8வது நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும் 51 மாவட்ட கூடுதல் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>