பழநி எரமநாயக்கன்பட்டியில் மாக்காச்சோள சாகுபடி வயல் விழா

பழநி: பழநி அருகே எரமநாயக்கன்பட்டியில் மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் கோ- 6 வீரிய ஒட்டு என்ற மக்காச்சோள பயிர் சாகுபடியின் வயல் விழா நடந்தது. இணை பேராசிரியர் செல்வக்குமார் தலைமை வகித்தார். வேளாண் மேற்பார்வையாளர் சரவணக்குமார் வரவேற்றார். விழாவில் மக்காச்சோள பயிர் சாகுபடியுடன் ஆடு, கோழி, மாடு வளர்ப்புகளின் மூலம் கிடைக்கும் வருமானம், ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட செயல்பாடுகள், மக்காச்சோள பயிர் சாகுபடிக்கு செய்ய வேண்டிய உழவு முறைகள்,  பயிர் இடைவெளி, களைக்கொல்லி, அடியுரம்- மேலுரம் இடுதல், நுண்ணூட்ட செயல்பாடுகள், படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் உழவியல் விஞ்ஞானி சதீஸ்குமார், இளநிலை வேளாண் அலுவலர் பாடலீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

The post பழநி எரமநாயக்கன்பட்டியில் மாக்காச்சோள சாகுபடி வயல் விழா appeared first on Dinakaran.

Related Stories: