தமிழக அரசு கொண்டு வந்துள்ள தடை உத்தரவால் மீண்டும் வேலைவாய்ப்பு பறிபோகும்: கோயம்பேடு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

சென்னை: கோயம்பேடு அண்ணா மொத்த காய்கறி வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் சங்கர், செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தலைமை செயலாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது: கோயம்பேட்டில் மொத்த வியாபாரிகள் கடைகள் சுமார் 1,800 உள்ளது. 4 ஆயிரம் பேர் வியாபாரம் செய்து வருகிறோம். எங்களிடம் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். தமிழக அரசு கொண்டு வந்த தடை உத்தரவால் வேலைவாய்ப்பு இழக்க நேரிடும். கடந்த ஆண்டு ஏற்பட்ட வியாபார இழப்பிற்கு அரசு தரப்பில் எந்த நிதி உதவியும் செய்யவில்லை. தற்போது 2வது அலை பெருந்தொற்றால் தமிழக அரசு கொண்டு வந்துள்ள தடை உத்தரவால் மீண்டும் எங்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். எங்கள் வணிக வளாகம் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை நடத்த ஆவன செய்ய வேண்டும்.

Related Stories: