இருதய நோய் அறுவைச்சிகிச்சை , புற்றுநோய் சிகிச்சைக்காக, நிவாரணம் வழங்கப்பட்டது : டி. ஆர். பாலு, எம்.பி,க்கு பிரதமர் அலுவலகம் பதில் கடிதம்.

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி. ஆர். பாலு, அவர்கள், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில், வினோபாஜி நகர், பல்லாவரத்தை சேர்ந்த, திரு. சம்சுகனி அவர்களின் மகன் திரு.யூசப் மற்றும் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த, திரு.  ஹரி  பிரசாத் அவர்களின் மூன்று வயது குழந்தை ராகா ரக்சனா, இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேலும், கல்லிக்குப்பம், அம்பத்துலீரைச் சேர்ந்த திரு. குமார் அவர்களின் மகன் திரு. அரவிந்தன் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும்,  மேற்கண்ட மூவருக்கும், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உதவி அளிக்குமாறு, மாண்புமிகு பாரதப் பிரதமர், திரு. நரேந்திர மோடி, அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து 9 மற்றும் 23 மார்ச் 2021 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் பின் வருமாறு :-பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து திரு. யூசப் மற்றும் குழந்தை ராகா ரக்சனா ஆகியோரின் இருதய நோய் சிகிச்சைக்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 50,000/- மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்றும்,       திரு. மு. அரவிந்தன் அவர்களின் புற்று நோய் சிகிச்சைக்காக ரூபாய் 3,00,000/- கிருஸ்டியன் மெடிக்கல் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்றும், சிகிச்சை முடிந்த பின்னர்,  உரிய ஆவணங்களின் நகலை, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், ஆவணங்கள் கிடைத்த பின்னர், இருதய நோய் அறுவை சிகிச்சைக்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 50,000/- மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் மற்றும் ரூபாய் 3,00,000/- புற்று  நோய் சிகிச்கைக்காக கிருஸ்டியன் மெடிக்கல் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், பிரதமர் அலுவலக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: