தேர்தல் விதிமுறைகள் இருக்கும் நேரத்தில் அம்பேத்கர் சட்டப்பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் அறிவிப்பு

சென்னை: கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சந்தோஷ்குமார் நியமிக்கப்படுகிறார். பதவி ஏற்றது முதல் 3 ஆண்டுகள் துணைவேந்தர் பொறுப்பில் இருப்பார். கற்றல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் சந்தோஷ்குமார். தமிழக அரசின் சட்டக்கல்வி இயக்குனராக 7 ஆண்டுகள் பணியாற்றிய போது, 7 புதிய சட்டக்கல்லூரிகள் மற்றும் 11 முதுகலை சட்டப்படிப்புகள் உருவாக காரணமாக இருந்தவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்வக்குமார் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தேர்தல் முடிவு அறிவிக்காமல் உள்ள நிலையில், புதிய அரசு பதவி ஏற்கும்வரை காத்திருக்காமல் கவர்னர் இவ்வாறு நியமனங்கள் செய்வதற்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த கண்டனத்துக்குப் பிறகும் சட்டப் பல்லைக்கழக துணை வேந்தராக சந்தோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: