பவானிசாகர் அணை முன்பு ஆற்றின் குறுக்கே மந்த கதியில் பாலம் கட்டுமான பணிகள்: கிராம மக்கள் அவதி

சத்தியமங்கலம்: புஞ்சை புளியம்பட்டி-பண்ணாரி சாலையில் பவானிசாகர் அணையின் முன்புறம் பவானி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்ட பாலம் பழுதடைந்து விரிசல் விழுந்ததால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக புங்கார், பெரியார் நகர், காராச்சிக்கொரை, முத்துராஜா நகர், கொத்தமங்கலம், புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம், தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்ட கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தற்போது கட்டுமானப் பணி பாதியிலேயே நிற்கிறது. பாலம் கட்டுமான பணி மந்த கதியில் நடைபெற்று வருவதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொட்டம்பாளையம் ஆற்றுப்பாலம் வழியாக சுமார் 8 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே புதிய பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பவானிசாகர் அணை பகுதியில் உள்ள கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: