தேர்வு பயத்தை போக்குவது எப்படி? பிரதமருடன் உரையாடிய விருதுநகர் மாணவிகள்

விருதுநகர்: தேர்வு பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி மாணவர்களுடன் இணையவழியில் நடத்திய கலந்துரையாடல் (பரிக்‌ஷா பே சர்ச்சா) நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 6 பள்ளிகள் தேர்வு செய்து அனுப்பப்பட்டன. இதில் 2 பள்ளிகள் தேர்வாகின. விருதுநகர் கல்வி மாவட்டம் வீரார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி கனகலெட்சுமி, திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்டம் ராஜபாளையம் அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நவகீதாஞ்சலி ஆகியோர் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மாணவிகளுடன், பிரதமர் மோடி இணையவழியில் கலந்துரையாடினார். இதுகுறித்து மாணவி நவகீதாஞ்சலி கூறுகையில், ‘‘பிரதமர் மோடியிடம் தேர்வு எழுதிய போது எந்த மாதிரியான பயம், அழுத்தத்தை எதிர் கொண்டீர்கள்? அதில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தீர்கள் என்ற கேள்வி கேட்டு இருந்தேன். அதற்கு, தேர்வு எழுத செல்லும் போது தனக்கும் படித்தது மறந்து விடுமோ என்ற பயமும், தேர்வு எழுதி வெளியே வந்த பிறகு எழுதிய பதில்கள் சரியாதா என்ற டென்சனும் இருந்ததாகவும், அதை தியானம் மூலம் சரி செய்ததாக அவர் தெரிவித்தார்’’ என்றார்.

Related Stories: