ஆவடி மாநகராட்சியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகள்

சென்னை: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதிகளான தென்றல் நகர் மேற்கு, 6வது தெரு, 7வது தெரு, 8வது தெரு, தென்றல் நகர் மேற்கு 2வது மெயின் ரோடு, தென்றல் நகர் கிழக்கு 13வது தெரு முதல் 17வது தெருக்கள், சரஸ்வதி நகர் டேங்க் ரோடு, எம்.ஜி.ஆர் தெரு, காந்தி தெரு, சரஸ்வதி நகர் 3வது தெரு, 4வது தெரு, 6வது தெரு மற்றும் குறுக்கு தெருக்கள், விக்னேஷ்வரா நகர் முதல் தெரு, டாக்டர் அம்பேத்கர் நகர் விரிவாக்கம் முதல் தெரு, முல்லை நகர் 2வது தெரு, 3வது தெரு, தேவி ஈஸ்வரி நகர் 1 முதல் 6வது தெருக்கள், வடக்கு முல்லை நகர், கக்கன் தெரு காமராஜர் தெரு, வடக்கு தென்றல் நகர் 12வது தெரு 13வது தெருக்கள், அண்ணனூர் ஜோதி நகர், மூன்று நகர் மற்றும் பட்டாபிராம் பகுதிகளான கோபாலபுரம் மெயின் ரோடு, குறுக்கு தெருக்கள், மாங்குளம் பிள்ளையார் கோவில் தெரு, சித்தேரிக்கரை ரோடு, தென்றல் நகர் 2வது குறுக்கு தெரு, 4வது மெயின் ரோடு, 10வது தெரு, 11வது தெரு, கிழக்கு கோபாலபுரம் 6வது தெரு, 9வது தெரு, 11வது தெரு, கோபாலபுரம் 4வது தெருவில் குறுக்குத் தெருக்கள், சேக்காடு ஆகிய இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக கிடக்கின்றன.

இதனால் பாதசாரிகள் அறவே நடமாட முடியாமல் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் குழியுமான சாலையில் விழுந்து காயமடைகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், அவசர தேவைக்கு மேற்கண்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் வண்டிகள் வர முடியவில்லை. இதனால் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சிறிய மழை பெய்தால் கூட சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன. இதனால் பாதசாரிகள் அறவே நடமாட முடியவில்லை. எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: