ராஜபாளையத்தில் வாகனங்களால் உடையும் குழாய்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

ராஜபாளையம் :  ராஜபாளையம் நகர் பகுதியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ராஜபாளையம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உற்பத்தியாக கூடிய மழை நீரானது தேக்கி வைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு நகர் பொதுமக்களுக்கு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாளச்சாக்கடை திட்டம் பணிகள் நகரில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கனரக வாகனங்கள் கடந்து செல்லும்பொழுது பள்ளங்கள் ஏற்பட்டு அப்பகுதிகளில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணடிக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே குடிநீர் குழாய் சேதமடைந்து பலலட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

இதுகுறித்து நகர் பொதுமக்கள் கூறுகையில், அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் திட்ட பணிகள் நிறைவு பெற்ற இடங்களில் உடனடியாக குடிநீர் குழாய்களை பாதுகாத்து அப்பகுதியில் விரைவில் சாலைகள் அமைக்க வேண்டும். அப்படி செய்தால் குடிநீர் குழாய்கள் சேதம் அடையாது. குடிநீரும் வீணாகாது. ஆனால், ெதாடர்ந்து வாகனங்களால் குடிநீர் குழாய்கள் உடைந்து அன்றாடம் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: