கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் கார் மீது அதிமுகவினர் தாக்குதல்: காவல்துறை வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு

கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு அதிமுகவினர் ெகாலை மிரட்டல் விடுத்தனர். கார் மீது தாக்குதல் நடத்தினர். காவல்துறை வேடிக்கை பார்ப்பதாக திமுக வேட்பாளர் குற்றம்சாட்டினார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 10 ேபர் போட்டியிடுகின்றனர். இவர்களில், திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகிேயாருக்கு இடையே கடும் ேபாட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு நாளான நேற்று கார்த்திகேய சிவசேனாபதி, தனது காரில் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்குப்பதிவு எப்படி நடக்கிறது? என ஆய்வு செய்தார். முற்பகல் 11.45 மணியளவில் கோவை செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல முயன்றார். ஆனால், அங்கு திரண்டிருந்த அதிமுக மற்றும் பாஜவை சேர்ந்தவர்கள், அவரை உள்ளே விட அனுமதி மறுத்தனர்.

அப்ேபாது அவர், ‘‘நான் முறைப்படி பாஸ் வாங்கியுள்ளேன். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் செல்ல வேட்பாளர்களுக்கு அனுமதி உண்டு, நீங்கள் எப்படி தடுக்கிறீர்கள்?’’ என ேகள்வி கேட்டார். உடனே அங்கு திரண்டிருந்த அதிமுக மற்றும் பாஜகவினர், ‘இது பதற்றமான தொகுதி. இங்கு, எந்த கட்சியினரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை’ எனக்கூறினர். இதனால், திமுக-அதிமுக தொண்டர்களுக்கு இடையே தகராறு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார், இரு தரப்பினரையும் விலக்கிவிட்டு மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும்படி, ஒழுங்குபடுத்தினர். ஆனாலும், திமுக-அதிமுகவினர் இருதரப்பினரும் தனித்தனி கும்பலாக வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து, அதிமுகவினரின் செயலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, துணை கமிஷனர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பு பாதுகாப்பு படையினர் வந்து இரு தரப்பினரையும் அமைதிபடுத்தினர். அதன்பின், மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.

இதனிடையே, வேட்பாளர் என்கிற முறையில் கார்த்திகேய சிவசேனாபதி, பூத்துக்கு உள்ேள ெசன்று, வாக்குப்பதிவு எப்படி நடக்கிறது? என ஆய்வு செய்தார். சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் வெளியே வந்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த அதிமுக, பாஜ தொண்டர்கள், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சிலர் ெகாலை மிரட்டல் விடுத்தனர். அப்ேபாது, அதிமுக தொண்டர் ஒருவர் போலீஸ்காரரின் லத்தியை பிடுங்கி, கார்த்திகேய சிவசேனாபதி காரில் பலமாக தாக்கினார். அதிர்ஷ்டவசமாக கார் கண்ணாடி உடையவில்லை. இதுபற்றி கார்த்திகேய சிவசேனாபதி கூறியதாவது:

அதிமுகவினர் ேதால்வி பயத்தில் உள்ளனர். அதனால், எனது வருகையை எதிர்நோக்கி காத்திருந்து, என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அண்ணன் அன்பரசு தலைமையில் 100 பேர் தொகுதிக்குள் வலம் வருகின்றனர். அவர்கள்தான் எனக்கு ெகாலை மிரட்டல் விடுத்தனர். என் கார் மீது தாக்குதல் நடத்தியதும் அவர்கள்தான். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நாகராஜன், போலீஸ் கமிஷனர், மேற்கு மண்டல ஐ.ஜி. ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளேன். இவ்வாறு சிவசேனாபதி கூறினார். இச்சம்பவத்தை தொடர்ந்து, கார்த்திகேய சிவசேனாதிபதி பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று, வாக்குப்பதிவு நிலவரங்களை ஆய்வு செய்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Related Stories: