கடவுளை வைத்து பிரசாரம் கமல் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதேதொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பழனிக்குமார் என்பவர் காட்டூர் போலீசில் அளித்த புகாரில், காட்டூர் பகுதியில் கமல்  பிரசாரத்தில் ராமர் மற்றும் அம்மன் வேடமிட்டவர்கள் பங்கேற்றனர்.

இவர்களின் கையில் மக்கள் நீதி மய்யத்தின் பேனர், சின்னம் இருந்தது. அப்போது கமல், இந்த கடவுள், அந்த கடவுள் எல்லாம் நமது கடவுள் தான். கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள் என குறிப்பிட்டு பேசினார். கடவுளை வைத்து பிரசாரம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். அதன்பேரில், கமல்ஹாசன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: