சத்தீஸ்கரில் பரபரப்பு; சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் நடந்த நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டை தாக்குதலில் 5 பாதுகாப்புப்படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கரில் மிகப்பெரிய சவாலாக நக்லடை்டுகள் விளங்கி வருகின்றனர். இங்கு நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் நக்சலைட்டுகள் இருப்பதை உறுதி செய்த பாதுகாப்பு படையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். பாதுகாப்புப்படையினரை கண்ட நக்சலைட்டுகள் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக துப்பாக்கியால் சுட்டனர்.

எனவே பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது இரு தரப்பிலும் நடந்த என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புபடை தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 14 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சத்தீஸ்கர் காவல் இயக்குநர் ஜெனரல் டி.எம் அவஸ்தி கூறுகையில்; நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, ​​டாரெம் பகுதியில் (சுக்மா மற்றும் பிஜாப்பூர் எல்லையில்) துப்பாக்கிச் சண்டை வெடித்தது. சிஆர்பிஎப்பின் உயரடுக்கு கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசலூட் ஆக்சன் யூனிட் (கோப்ரா), மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, துப்பாக்கிச் சண்டையில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு 10 பேர் காயமடைந்துள்ளனர் என கூறினார்.

Related Stories: