முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதி: சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன்...கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டுவிட்.!!!

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்குதலுக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த மாதம் 27-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது சச்சின் டெண்டுல்கர் டுவிட்டர் பக்கத்தில், சிறிய அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சச்சின் டெண்டுல்கர் 5 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின் கீழ் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். கவனமாக இருங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: