6 மாநிலங்களில் 9 தொகுதியில் இடைத்தேர்தல் திருப்பதியில் மாஜி ஐஏஎஸ் அதிகாரி போட்டி: பாஜக வேட்பாளர் பட்டியலில் தகவல்

புதுடெல்லி: ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள 9 மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. திருப்பதி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி போட்டியிடுகிறார்.

நாடு முழுவதும் காலியாக உள்ள மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறவுள்ளது. ஆறு மாநிலங்களில் நடைபெறும் இடைத் தேர்தலுக்கான ஒன்பது  வேட்பாளர்களின் பெயரை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘முன்னாள்மத்திய அமைச்சருமான சுரேஷ் அங்கதி கடந்தாண்டு இறந்ததால் பெல்காம் தொகுதி காலியாக உள்ளது.

அந்த தொகுதியில் அவரது மனைவி மங்கள சுரேஷ் அங்கதி போட்டியிடுகிறார். அதேபோல் பசவகல்யாண் மற்றும் மஸ்கி ஆகிய தொகுதிகளில் முறையே ஷரானு சலகர் மற்றும் பிரதாப்கௌடா பாட்டீல் ஆகியோர்  போட்டியிடுகின்றனர். ஜார்க்கண்ட்  மாநிலத்தில் மதுபூர் மக்களவைத் தொகுதியில் கங்கா நாராயண் சிங்  போட்டியிடுகிறார். மத்திய பிரதேசம் தாமோவில் ராகுல் சிங்கும், மிசோரம் சங்டே செர்சிப் தொகுதியில் லால்ஹ்ரியாத்ரெங்காலும் போட்டியிடுகின்றனர். ஒடிசா மாநிலம்  பிபிலி தொகுதியில் அஷ்ரித் பட்நாயக் போட்டியிடுகிறார்.

ராஜஸ்தான்  மாநிலம் சஹாரா, சுஜன்கர் மற்றும் ராஜ்சமந்த் ஆகிய தொகுதிகளில் முறையே ரத்தன்லால் ஜாட், கெமரம் மேக்வால் மற்றும் தீப்தி மகேஸ்வரி  ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருப்பதி எம்பி துர்கா பிரசாத் ராவ் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பரில் காலமானார். அதையடுத்து அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ்  அதிகாரி கே.ரத்னா பிரபா போட்டியிடுகிறார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: