கன்னியாகுமரி முட்டப்பதியில் பங்குனி திருவிழா

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு கொடி பட்டம் பதியை சுற்றி வந்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு முட்டப்பதி கடலில் இருந்து தீர்த்தமாட செல்லுதல் உள்ளிட்ட பணிவிடைகள் நடக்கிறது. திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. 8ம் நாளான ஏப்.2ம் தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டை நடக்கிறது.

இந்த ஆண்டு பதியை சுற்றி வந்து பதிவளாகத்திலேயே கலி வேட்டை நடக்கிறது. 11ம் விழாவான 5ம் தேதி ஐயா பச்சை வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி காலை 4 மணிக்கு கொடியிறக்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் மாலை 7 மணிக்கு வாகன பவனி, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Related Stories: