கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூரில் திரவுபதியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள பழமையான திரவுபதியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணி முதல் திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, யாக சாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 7 மணி முதல் யாகசாலையில் இருந்து கோபுர கலசங்கள் புறப்பட்டு, கோபுர கலசம், கொடிமரம், தர்மர், பீமன், அர்ஜீனன், நகுலன், சகாதேவன் ஆகிய சுவாமிகள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சிவ.ரா.குமரேசன் ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து  மாலை பேண்டு வாத்தியங்கள், வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறும். தொடர்ந்து இரவு 10மணிக்கு பாஞ்சாலி அம்மன் நாடகமும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பெரியதனங்கள் நடராஜன், ஆறுமுகம் தலைமையில் கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Related Stories: