தரமற்றதாக போடப்பட்டதால் முன்றே நாளில் தார்சாலை சேதம்-பொதுமக்கள் குற்றச்சாட்டு

காரைக்குடி :  காரைக்குடி அருகே புதுவயலில் இருந்து மத்தூர் வரை பிரதம மந்திரியின் கிராமசாலை திட்டத்தில், ரூ.2 கோடியே 48 லட்சத்துக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக பணிகள் நடந்துள்ளது. இச்சாலை காமராஜர் நகர், பெரிய வேங்காவயல், சின்ன வேங்காவயல், வலையன்வயல், புதுகண்டனூர் வழியாக மாத்தூர் வரை செல்கிறது. வேங்காவயல் ஊராட்சி மக்கள் புதுவயல், காரைக்குடி செல்வதற்கு இச்சாலை தான் பிரதானமாக உள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் சின்ன வேங்காவயல் உள்பட்ட பகுதிகளில் சாலை பணிகளை முடித்துள்ளனர். ஆனால் சாலை தரமானதாக அமைக்காததால் வாகனம் சென்றால் கூட பெயர்ந்து விடும் நிலை ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சகாதேவன் கூறுகையில், சாலை பணி துவங்கி இரண்டரை வருடங்களாக நடந்து வந்தது. சாலை மிக முக்கிய தேவையாக இருந்ததால் பொறுமையாக இருந்தோம். ஆனால் சாலை தரமானதாக அமைக்கவில்லை. போட்ட மூன்றே நாளில் வாகனம் சென்றவுடன் சாலை பெயர்ந்து விட்டது. அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் வந்து கூட பார்க்கவில்லை. சாலையில் அமர்ந்து போராட்டம் செய்த பிறகு பேட்ஜ் ஒர்க் செய்வதாக கூறுகின்றனர். எங்களுக்கு தரமான சாலை அமைத்து தரவேண்டும் என்றனர்.

Related Stories: