ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை ஏரியில் குப்பை கொட்டி எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

* நிலத்தடி நீர் மாசடையும் அபாயம்

* அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை ஏரியில் குப்பைகள் கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை ஏரி 10 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து பயன் பெறுகிறார்கள். மேலும், லாலாப்பேட்டை ஏரியில் சில விஷமிகள் லாலாப்பேட்டை, சிப்காட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து அகற்றும் சிமென்ட் ஷீட்டுகள் குவியல், குவியலாகவும் மலைபோல் கொட்டிவிட்டு செல்கின்றனர்.

இதைத்தொடர்ந்து தனியார் தொழிற்சாலைகளில் தினசரி அள்ளும் குப்பைகளை கொண்டு வந்து லாலாப்பேட்டை ஏரியில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாலாபேட்டை, எடப்பாளையம், வானாபாடி உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: