சேலத்தில் நுங்கு விற்பனை சுறுசுறுப்பு

சேலம் : தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பனைமரங்களில் நுங்கு விளைச்சல் அதிகரிக்கும். சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனைமரங்களில் நுங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுங்கு விவசாயிகள் பனைமரங்களில் நுங்கை பறித்து, சாலையோரம் குவித்து விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மூன்று மாதங்களுக்கு நுங்கு விளைச்சல் இருக்கும். நுங்கில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளதால் உடல் சூட்டை தணிக்கும். 2 நுங்கு ₹10 முதல் ₹12 விற்பனை செய்கிறோம். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்,’ என்றனர்.

Related Stories: