மூவண்ண கேக்கை வெட்டி சாப்பிடுவதை தேசியக்கொடியை அவமதித்ததாக கருத முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: கோவையில் 2013-ல் தேசிய கொடி வண்ணத்திலான கேக்கை வெட்டி சாப்பிட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 2013-ல் கிறிஸ்துமஸ் விழாவின் போது சிலர் மூவண்ண கேக்கை வெட்டி சாப்பிட்டதாக புகார் எழுந்தது. புகாரை அடுத்து மூவண்ண கேக்கை சாப்பிட்டவர்கள் மீது கோவை நடுவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கேக் சாப்பிட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் மூவண்ண கேக் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மூவண்ண கேக்கை வெட்டி சாப்பிடுவதை தேசியக்கொடியை அவமதித்ததாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: