சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கான தமாகா தேர்தல் அறிக்கை யை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று கட்சி தலைவர் ஜி.ேக.வாசன் வெளியிட்டார். தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்டேஷ், முனவர் பாஷா, சக்திவடிவேல், கவிஞர் ரவி பாரதி, ஆர்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், அண்ணாநகர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் வருமாறு: பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், தனியார் பள்ளிகளுக்கு புதிய அனுமதி வழங்காமல் நிறுத்திவிட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுப்போம்.