×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* புளித்த தயிரில் பிரெட் துண்டுகளைப் போட்டு மசித்த உருளைக் கிழங்குடன் காரம், உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெயில் பொரித்தெடுத்தால் அருமையான சுவையுடன் இருக்கும்.
*  சோள மாவும், அரிசி மாவும் சம அளவு கலந்து பஜ்ஜி சுட்டால் கடலை மாவில் செய்வதை விட சுவையாக இருக்கும்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

* கீரை மசியலுக்கு புளி சேர்ப்பதற்குப் பதிலாக எப்போது மாங்காய் கிடைக்கும் சீஸன் என்பதை அறிந்து வாங்கி பொடிப் பொடியாக மாங்காயைச்
சீவி சேர்த்து வேக விட்டு மசித்தால் பிரமாதமாக இருக்கும்.
* தக்காளி குருமா, ரசம், கிரேவி போன்றவற்றைத் தயாரிக்க தக்காளி விழுதுக்கு மிக்ஸியில் பயன்படுத்தாமல் கேரட் துருவியைக் கொண்டு தக்காளியை மெதுவாகத் தேயுங்கள். விழுதுகள் எளிதாகக் கிடைத்துவிடும் தோலையும் தூக்கி எறிந்துவிடலாம்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

*ஒரு வாழைப்பழத்துடன் சிறிது பெருங்காயம் வைத்து சாப்பிட்டால் உணவு நன்கு செரிக்கும்.
அரிசியுடன் வெந்தயம் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.
- க.நாகமுத்து, திண்டுக்கல்.

*பஜ்ஜி மாவுடன் ஒரு வெங்காயம் மூன்று பூண்டு பற்கள் சிறிது சோம்பு முதலியவற்றை நைஸாக அரைத்துக் கலந்து பஜ்ஜி செய்தால் வாசனையுடன் கூடிய சுவையான பஜ்ஜி கிடைக்கும்!
 - எஸ்.லட்சுமி, செங்கோட்டை.

*பொரிகடலை மாவுக்குப் பதிலாக பயத்தம்பருப்பு மாவை வெல்லப்பாகு சேர்த்து மாலாடு செய்தால் சத்து மிகுந்ததாக இருக்கும்.
- நா.நாராயணன், பாளையங்கோட்டை.

*சாப்பிட்டபின் செரிமானம் சீராக இல்லாத பட்சத்தில்தான் வாயு, அசிடிட்டி போன்றவைகள் ஏற்படும். இதற்கு ஒரு பாத்திரத்தில் பொடி செய்த பிரியாணி இலையுடன் ஒரு கப் வெந்நீர் சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைத்து எடுத்து ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால்
செரிமானம் சீராகும்.
- வா.மீனாவாசன், வந்தவாசி.

*வாழைப்பூவை சிறிது தயிர் விட்டுப் பிசறி இட்லித்தட்டில் வேக வைத்து உண்டால் ருசியும், சுவையும் நிறையவே இருக்கும்.
*முருங்கைக்கீரையை துவரம்பருப்புடன் சமைத்து ஒரு முட்டை உடைத்து ஊற்றி, கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட, ரத்தம் விருத்தியாகும்.
- சு.இலக்குமண சுவாமி, திருநகர்.

* வாழைப்பூ ஆயும்போது உப்பைக் கையில் தடவிக்கொண்டால் கை பிசுபிசுப்பில்லாமல் இருக்கும்.
* தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு மாவுடன் கலந்து தோசை
வார்த்தால் தோசை மிருதுவாக இருக்கும்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

*குளிர்காலத்தில் உடல் வெப்பம் குறையாமல் இருக்க மிளகாய்க்குப் பதில் மிளகு உபயோகிக்கலாம். வயிற்றுக்கேடு இல்லாத உணவு.
*கத்தரிக்காயை மூடி இருக்கும் இலை போன்ற பகுதியை சேகரித்து சட்னி அரைக்கலாம். வித்தியாசமான சுவையோடு சூப்பராக இருக்கும்.
- நா.செண்பகா, பாளையங்கோட்டை.

* உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வடை சுட்டால் வடை துளிகூட எண்ணெய் குடிக்காமல் சுவையாக இருக்கும்.
- ஆர்.ஹேமமாலினி, மணப்பாறை.

* அகத்திக்கீரையை அரைத்துச் சாறெடுத்து மோரில் கலந்து பருக வயிற்றுவலி தீரும்.
3 வெள்ளைப் பூண்டுகளை பாலில் காய்ச்சிக் குடிக்க மூட்டுவலி குணமாகும்.
- கே.ராகவி, வந்தவாசி.

*ரவா கேசரி, சேமியா கேசரி, அவல் கேசரி செய்யும்போது வெள்ளரி விதை சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.
*சுண்டல் தாளித்த கையோடு ரெடிமேட் புளியோதரைப் பொடியை தூவி இறக்கினால், சுண்டல் மிகுந்த சுவையாயிருக்கும்.
* நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க விட்டு சாம்பாரிலோ, ரசத்திலோ ஊற்றி விட்டால் ‘கம கம’வென வாசனை கூடும்.
- இல.வள்ளிமயில், மதுரை.

* மிளகாய் பொடி அரைக்கும் போது காய்ந்த மிளகாயை காம்புடனே வறுத்து பருப்பு வகைகளையும் வறுத்து 1 டீஸ்பூன்
கொள்ளையும் வறுத்து பொடி செய்யுங்கள். உடலுக்கு நல்லது.
*காலை டிபனுக்கு சைடு டிஷ் சட்டினியா? தேங்காயுடன் பொட்டுக்கடலைக்குப் பதில் 2 பாதாம், 2 ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து சட்னி செய்யுங்கள். சுவையாக இருக்கும். புரதம் நிறைந்தது என்பதால் உடலுக்கு நல்லது.
- சுகன்யாதேவி, சென்னை.

*தோசை மாவு மிகவும் புளித்திருந்தால் ஒரு கைப்பிடி மைதா, ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். புளிப்பு மட்டுப்படுவதோடு சுவையான ஸ்பாஞ்ச் தோசையும் தயார்.
* வெளியே கிளம்பும்போது அரை நெல்லிக்காய் ஒன்றிரண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். நாக்கு உலர்ந்து போகாமல் இருக்கும்.

இலந்தை பழத்தின் மருத்துவ பயன்கள்

* இலந்தை பழத்தில் புரதம், தாது உப்புகள் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளது.
* தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் சரியாகும்.
* கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
* இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சரியாகும்.
* இலந்தை பழத்தில் விட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.



Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!