கோவை: கோவையில் ரூ.1,621 கோடி மதிப்பிலான அவிநாசி சாலை மேம்பாலம் கட்டும் பணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. தொலைவில் மேம்பாலம் கட்ட திட்டமிட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு முறையாக செய்யப்படவில்லை என மனுதாரர் புகார் அளித்துள்ளார்.
