- கரமடை அரங்கநாதர் கோயில்
- காரமடை
- மாசி மாகம்
- கரமடை ஆரங்கநாதர் சுவாமி கோயில்
- கோயம்புத்தூர்
- வைகுண்ட ஏகாதசி
- புரட்டாசி சனிக்கிழமை
காரமடை: காரமடை அரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.29.74 லட்சம் வழங்கியுள்ளனர். கோவை காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் மாசிமகத்தன்று நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதேபோல் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் தேர்த்திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. விழா முடிந்தவுடன் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கோயிலில் வைக்கப்பட்ட 13 உண்டியல்களில் முதற்கட்டமாக 7 உண்டியல்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. நேற்று இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 6 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் விமலா, தக்கார் உஷா நந்தினி தலைமையில் செயல்அலுவலர் முத்துசாமி, கோயில்களின் சரக ஆய்வாளர் ஹேமலதா முன்னிலையில் எண்ணும் பணி நடைபெற்றது.
இப்பணியில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர். இப்பணியின் நிறைவாக ரூ.29 லட்சத்து 74 ஆயிரத்து 636 ரொக்கப்பணம், 63 கிராம் தங்கம், 152 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.
