×

அழகிய தேரில் அருளிய மாரியம்மன்: தேரோட்டம் கோலாகலம்

 

உடுமலை: அலங்கரித்த தேரில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் உடுமலை மாரியம்மன் கோவில் திருத்தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது; திருத்தேரோட்டத்தால், நகரமே விழாக்கோலத்தில் காட்சியளித்தது. உடுமலை நகரில், பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் திருத்தேரோட்டம் மிக பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு திருவிழாவுக்கு கடந்த மாதம் நோன்பு சாட்டப்பட்டு, திருக்கம்பம் நடப்பட்டது. நாள்தோறும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

நேற்று மாலை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை திருத்தேரில், அம்மன் சூலத்தேவருடன் எழுந்தருளினார். மாலை கோவிலில் இருந்து, திருத்தேரோட்டம் துவங்கியது. ஓம்சக்தி பராசக்தி என பக்தர்கள் கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மணிகண்டன் யானை தேரின் பின்புறம் தள்ளியது. தளி ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில், திருத்தேர் அசைந்தாடி வந்தது.

Tags : Mariamman ,Udumalai ,Mariamman temple ,
× RELATED நெல்லை அருகே தேர்தல் புறக்கணிப்பு...