நீடாமங்கலம் அருகே தார்சாலை ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாக மாறியது-வாகனஓட்டிகள் அவதி

*இது உங்க ஏரியா

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகில் உள்ளது தென்கரை வாயல் கிராமம். இங்கிருந்து ரொக்க குத்தகை என்ற இடத்தில் மன்னார்குடி செல்லும் சாலையில் இணையும் தார்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிகள் பெயர்ந்து சரிபாதியாக மண் சாலையாக மாறியது. இது தற்போது நடந்து கூட செல்ல முடியாத நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.

இந்த சாலையில் தென்கரைவாயல், வடகாரவயல், காணூர், பருத்திக்கோட்டை, உடையார்மான்யம், காளாஞ்சிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கின்றனர். இரவு நேரங்களிர் இந்த சாலையில் மின்கம்பங்கள் இருந்தும் ஒரு இடத்தில் கூட மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்நுள்ளது.

இந்த வழியில் ஒரு ரயில்வே கேட்டும் உள்ளது. இந்த மோசமான சாலையில் இரவு நேரங்களில் செல்பவர்கள் சாலையில் நடமாடும் விஷஜந்துக்களுக்கு அச்சப்பட்டு செல்கின்றனர். பலர் இந்த சாலையில் கோடை காலத்தில் நடந்து செல்லும்போது விஷஜந்து கடித்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். எனவே விபத்துகள் எற்படாமல் இருக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே கவனம் செலுத்தி நேரில் சென்று பார்வையிட்டு உடனே இந்த சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி, சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: