கொரோனா பாதிப்புக்கு இடையில் 11456 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டது: இந்திய ரயில்வே தகவல்

சென்னை: கொரோனா பாதிப்புக்கு இடையில் 11,456 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் 2021 மார்ச் 11ம் தேதி, இந்திய ரயில்வே 11,456 மில்லியன் டன் ஒட்டுமொத்த சரக்கை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக கையாளப்பட்டதை விட 10 சதவீதம் அதகமாகும். இது தேசிய பொருளாதார முன்னேற்றத்தின் சிறந்த நிலையை காட்டுகிறது.

மேலும், 2021 மார்ச் 11ம் தேதி இந்தியன் ரயில்வேயின் சரக்கு கையாளுதல் 47 மில்லியன் டன்களாக இருந்தது. இதே தேதியில் கடந்த ஆண்டு 33 மில்லியன் டன் கையாளப்பட்டதுடன் ஒப்பிடும்போது 34 சதவீதம் நடப்பாண்டில் அதிகமாகும். 2021 மார்ச் 11ம் தேதி வரை சரக்கு ரயில்களின் சராசரி வேகம் 45.49 கிமீ வேகம். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதே காலகட்டத்தில் (23.29 கிமீ) இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. சரக்கு இயக்கத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற இந்தியன் ரயில்வேயில் பல சலுகைகள்/ தள்ளுபடிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: