வாணியம்பாடியில் மயானக்கொள்ளை திருவிழா

வாணியம்பாடி : வாணியம்பாடியில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றங்கரையில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை திருவிழா நடைபெறுகிறது. அதன்படி, நேற்று சிறப்பு பூங்கரகம் எடுக்கப்பட்டு வாணியம்பாடியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், மாலை மேட்டுப்பாளையம் பாலாற்றில் அம்மன் சிரசு ஊர்வலமாக பூங்கரகம் எடுத்து வரப்பட்டது. பல்வேறு கிராமத்திலிருந்து வந்த பக்தர்கள் அம்மனை சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பாலாற்றில் பிரம்மாண்டமான மணலால் சிலை செய்து, அதனது கண்களில் 2 முட்டைகளை வைத்து, இளைஞர்கள் கொள்ளையடிக்கும் நிகழச்சியை நடத்தினர்.

Related Stories: