விபிஜே பங்காரு ஜூவல்லர்ஸ் சார்பில் ஒட்டியாணம் திருவிழா: 31ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: சென்னை அண்ணாசாலை ராணி சீதை மண்டபத்திற்கு கீழே உள்ள விபிஜே பங்காரு ஜூவல்லர்ஸ் சார்பில் ஆண்டுதோறும் ஒட்டியாண திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ஒட்டியாணம் திருவிழா நடைபெறுகிறது. இதில், 300க்கும் மேற்பட்ட ஒட்டியாணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பிரைடல் பைனரி என்பது நேர்த்தியான ஒட்டியாணத்தால் வரையறுக்கப்பட்டது. திருமணம் போன்ற விழாக்களின் போது  அணியப்படுகிறது. மேலும் பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான  உடையலங்காரத்திலும் ஒட்டியாணம் முக்கியமானதாகும். ஒட்டியாணம் பழங்காலம் முதல் மகத்தான கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்த பழங்கால ஒட்டியாணம் நவீன சமுதாயத்தில் இன்றும் குறிப்பிடத்தக்கவை. மேலும் ஒரே குடும்பத்தின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுறையினருக்கு மரபுகளை ஒப்படைத்த வரலாற்றில் விபிஜேயின் வீட்டிலிருந்து வரும் ஒட்டியாணம் திருவிழா அதன் சொந்த பங்கை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: