அரிசி கொழுக்கட்டை

எப்படிச் செய்வது?

அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர்த்தி மாவாக அரைக்கவும். இந்த மாவை வெள்ளைத் துணியில் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். வெறும் கடாயில் வேர்க்கடலையை வறுத்து ஆறியதும் பொடி செய்து தனியே வைக்கவும். அதே கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த்துருவலை வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை பொடி, தேங்காய்த்துருவல், வெல்லப்பொடி அனைத்தையும் கலந்து கொள்ளவும். பூரணம் ரெடி. வெந்த மாவில் உப்பு, தண்ணீர், 1 டீஸ்பூன் நெய் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகள் செய்து, வட்டமாக தட்டி 1 டீஸ்பூன் பூரணத்தை அதில் வைத்து மடித்து கொழுக்கட்டை செய்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

× RELATED மட்டன் குடல் வறுவல்