செங்கல்பட்டில் ரூ.1 கோடி பணம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.18 லட்சம் மற்றும் 10 கிலோ வெள்ளி பறிமுதல்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1.08 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் கூட்டுச்சாலையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டிருந்தது. உரிய ஆவணம் இல்லாமல் 2 கார்களில் எடுத்தது செல்லப்பட்ட ரூ.1.08 கோடி பணம் பறக்கும் படை சோதனையில் சிக்கியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.18 லட்சம், 10 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த பணம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சேலம் மாவட்டம் சூரமங்கலம் எல்லைக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையால் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எண்ணெய் ஆலை உரிமையாளர் கவின்ராஜ் காரில் எடுத்து சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருத்தணி சரஸ்வதி மில் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் டெம்போவில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.29 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேனில் பணம் எடுத்து வந்த 12 பேரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: