பெண் ஐபிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 19 அதிரடிப்படைபோலீசார் திடீரென பணியிட மாற்றம்

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஏற்கனவே,  சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணனை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டிஸ்வரி, சுங்கசாவடியில் செங்கல்பட்டு எஸ்.பிக்கு ஆதரவாக, பெண் எஸ்.பியின் காரை வழிமறித்து, அவரையும், அவரது கார் டிரைவரையும் மிரட்டிய செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ், அதிரடியாக திருத்தணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், செங்கல்பட்டு தாலுகா எஸ்.ஐ மணிகண்டன் மணிமங்கலம் (காஞ்சிபுரம் மாவட்டம்) காவல்நிலையத்திற்கும், இன்ஸ்பெக்டரின் கார் ஓட்டுனர் புண்ணியகோட்டி காஞ்சிபுரம் மாவட்ட போலீசுக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், எஸ்.பியுடன் வாகனங்களை மடக்கி அராஜகத்தில் ஈடுபட்டதாக, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்ளிட்ட 19 அதிரடிப்படை போலீசாரை  செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் சிக்கிய சில போலீசார் இன்னும் பணியிட மாற்றம் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டிஸ்வரி உரிய விசாரணை நடத்தி, இவ்விவகாரத்தில் தொடர்புடைய மற்ற போலீசாரையும் வேறிடத்திற்கு மாற்றவேண்டும் என்றும் சக போலீசார் கூறுகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு புதிய எஸ்.பியாக சுந்தரவதனம் பொறுப்பேற்றுள்ளார். இவர் நேரடியாக ஐபிஸ் முடித்தவர். இவர் ஏற்கனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக இரண்டு வருடங்களாக பணியாற்றியவர். எனவே, மாஜி எஸ்.பி கண்ணன் ஆதரவு போலீசார் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: