ஜவ்வரிசி அப்பளம்

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை கழுவி 6 கப் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலை ஊறியுள்ள ஜவ்வரிசியை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு, 8 கப் தண்ணீர், உப்பு, சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பச்சைமிளகாயை நைசாக அரைத்து அதையும் கலவையில் சேர்த்து கைவிடாமல் கிளறவும். ஜவ்வரிசி நன்கு வெந்து பளபளப்பாக வந்ததும் இறக்கவும்.

வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து முழுவதும் நல்லெண்ணெய் தடவி கரண்டியால் ஜவ்வரிசி கலவையை ஊற்றவும். காலையில் ஊற்றினால் மதியம் ஒவ்வொரு அப்பமாக எடுத்து மறுபுறம் திருப்பி வைக்கவும். மாலையில் ஓரளவு காய்ந்து விடும். மறுநாள் ஒரு தட்டில் இடைவெளி விட்டு அப்பளங்களை காயவைக்கவும். 3 நாட்கள் காயவைக்கவும். துணியிலும் காயவைக்கலாம். சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பயன்படுத்தலாம்.

× RELATED வெண்டைக்காய் குழம்பு