தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மார்ச் 13-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மார்ச் 13-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை முதல் 13-ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு ,பாபநாசம் பகுதியில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, திருப்பதிசாரம், கன்னியாகுமரி, நாகர்கோவிலில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் என கூறியுள்ளது.

Related Stories: