தேர்தல் நடத்தை விதியை மீறி பழனியில் பாஜக-வினர் வீடு வீடாக சென்று பரிசுப்பொருட்கள் விநியோகம்!: புகார் அளித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!!

மதுரை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பழனியில் பாஜக-வினர் வீடு வீடாக சென்று பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-வின் பழனி நகர துணைத்தலைவர், சித்ராமணி என்பவர் தேவாங்கூர் தெருவில் வீடு வீடாக சென்று பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்துள்ளார். இதுகுறித்து புகைப்பட ஆதாரங்களுடன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் திமுக-வினர் புகார் அளித்தனர். ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்வதாக திமுக-வினர் குற்றம்சாட்டியுள்ளனர். தொகுதி பங்கீடு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், பழனியில் பாஜக-வினர் பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்திருப்பது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்யும் பாஜக பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக-வினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது,  பாரதிய ஜனதா கட்சியின் நகர துணைத்தலைவர் சித்ராமணி, வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் கொடுத்துள்ளார். இது தொடர்பாக கேட்டபோது தாங்கள் ஆளுங்கட்சி என்பதால் இவ்வாறு பரிசுப்பொருட்கள் கொடுப்போம்; உங்களால் என்ன செய்ய முடியும் என்று மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து வி.ஓ. அலுவலகத்தில் புகார் செய்தோம். ஆனால் வி.ஓ. அதிகாரிகள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

Related Stories: