சட்டமன்ற தேர்தல் சிறப்புபார்வையாளர் பெண் அதிகாரியான மதுமகாஜன் சென்னை வருகை

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை யெட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க இரண்டு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு அதிகாரிகளில் ஒருவர் நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழக சட்டமன்ற தேர்தல் சிறப்பு பார்வையாளர் (செலவினங்கள்) பெண் அதிகாரி மதுமகாஜன் சென்னை வந்தடைந்தார். தமிழக அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார். இவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் கீழ் செயல்படுவார்கள். இவர்கள் தமிழகம் முழுவதும் செலவினங்களை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு மேற்பார்வையாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது. மற்றொரு அதிகாரியும் விரைவில் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>