சுருக்குமடி வலை பயன்படுத்த தடை மீன்வளத்துறை அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகை-வாக்குவாதம்: மரக்காணத்தில் பரபரப்பு

மரக்காணம்: மரக்காணத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்த மீன்வளத்துறை அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க அரசு தடை வித்துள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இந்த சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கும் மீன்கள் மற்றும் வலைகளை விழுப்புரம் மாவட்ட மீன் வளத்துறை அதிகாரிகள் அடிக்கடி பறிமுதல் செய்து வருகின்றனர்.

மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தில் நேற்று முன்தினம் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிப்பதாக வந்த தகவலையடுத்து ஆய்வாளர் சந்திரமணி தலைமையிலான மீன் வளத்துறை அதிகாரிகள் பனிச்சமேடு மீனவர் கிராமத்திற்கு சென்று சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர்.  இதனால் மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  ஆத்திரம் அடைந்த மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர், அதிகாரிகளை நேற்று முற்றுகையிட்டனர்.  மேலும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் முடியவில்லை.

அதிகாரிகள் மட்டுமே உள்ளோக்கத்துடன் அடிக்கடி இங்கு வந்து தடைசெய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.  சுருக்குமடி வலைகளை அனுமதிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை.  தமிழகத்தில் மட்டும் தான் அரசு தடை விதிக்கிறது என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். வேறு வழியில்லாமல் அதிகாரிகள் புறப்பட்டனர்.

Related Stories: