எந்த கட்சிக்கு வாக்கு?: ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: தமிழக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சபரிநாதன் அளித்த பேட்டி: டூரிஸ்ட் கார் மற்றும் மேக்ஸி கேப் (வேன்)களுக்கு ஆட்டோ போன்று மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும், தினம்தோறும் மாறுதலுக்கு உள்ளாகும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை கருத்தில் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டூரிஸ்ட் கேப் மற்றும் மேக்ஸி கேப்களுக்கு கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும், பல ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும், அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தின் பயன்களை அதிகரிக்க வேண்டும்.

அண்டை மாநிலமான பாண்டிசேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மேக்ஸி கேப் வாகனங்களுக்கான சீட் பர்மிட் அளவைபோல் தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும், சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீதும் மற்றும் இருசக்கர வாகனங்களை வணிகத்துக்கு பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீதும் போக்குவரத்து துறையில் தனி குழு அமைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த கோரிக்கைகளை தங்களது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் வெளியிடும் அரசியல் கட்சிகளுக்கு அனைத்து ஓட்டுநர்களும் ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டுநர்களின் வாக்கு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வாக்கும் மற்றும் மோட்டார் தொழிலை சார்ந்த அனைவரின் வாக்கும் அளிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: