பெண்கள் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு திட்டங்கள்; ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு மையங்கள்: தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கமல்

சென்னை: பெண்கள் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சீருடைத் துறையில் பெண்களுக்கு 50% வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார். ஒரு இளைஞர் 5க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கினால், அவருக்கு சிறப்பு நிதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான தமிழகம் என்ற இயக்கத்தை பள்ளி, கல்லூரிகளில் தோற்றுவிக்கும் என அறிக்கையில் சூட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு மையங்கள் தோற்றுவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு மேம்பாட்டுக்கான 7 செயல் திட்டங்களை கமல் அறிவித்தார். கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்வோம் என கூறினார். இன்னும் சில கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். அரசியல் மாற்றத்திற்கு உதவுபவர்களுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளேன் என கூறினார்.

Related Stories:

>